அண்ணாமலை பாதயாத்திரை - எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு!
பாஜக சார்பில் அண்ணாமலை நடத்தும் பாதயாத்திரைக்கு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நடைப்பயணம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் 28ம் தேதி ஊழலுக்கு எதிராக 'என் மண் என் மக்கள்' என்ற நடைப் பபயணத்தை தொடங்க உள்ளார். தமிழகம் முழுவது இந்த நடைப்பயணத்தில் அண்ணாமலை செல்ல உள்ளார். இந்த நடைப்பயணம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் இணைக்கும் வகையில் அமையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பாதயாத்திரை ராமேஸ்வரத்தில் தொடங்கி சென்னையில் முடிவடைய உள்ளது . இந்த பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக பாஜக சார்பில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அண்ணாமலை அழைப்பு
இந்நிலையில் இந்த நடைப்பயணத்தில் கலந்து கொள்ள அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கிறது. மேலும் பாஜக சார்பில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.