பாஜகவில் இருந்து ஒதுங்கியே இருக்கும் அண்ணாமலை - என்ன காரணம்?
அண்ணாமலை பாஜக கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை.
அண்ணாமலை
தமிழக பாஜக மாநில தலைவராக கடந்த 2021 ஆம் ஆண்டு அண்ணாமலை பொறுப்பேற்றார். கூட்டணி கட்சியான அதிமுகவை மதிக்காமல் பேஇச் வந்தார். இதனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி முறிந்தது.
தனித்தனியாக தேர்தலை எதிர் கொண்ட இந்த கட்சிகள் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. தொடர்ந்து அதிமுகவின் அழுத்தத்தால் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகியதையடுத்து, நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜக புறக்கணிப்பு
அதன்பின், அண்ணாமலை, கோயில் தியானம் என ஆன்மிக பயணங்களை மேற்கொண்டு வருகிறார். மேலும் விவசாயத்திலும், ஆடு. மாடு வளர்ப்பிலும் குடும்பத்தோடு நேரம் செலவழித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக கூட்டணி கட்சி தலைவராக எடப்பாடியை பாஜக மூத்த தலைவர்கள் சென்று சந்தித்த நிலையில் அண்ணாமலை புறக்கணித்திருந்தார். சென்னையில் நடைபெற்ற ஒரு நாடு ஒரு தேர்தல் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டிருந்த நிலையில்,
அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை. பாஜக மாநில தலைமை அழைப்பு விடுத்தாலும் அதனை அண்ணாமலை ஏற்றுக் கொள்வதில்லை என்றும் கட்சிப் பணியில் இருந்து ஒதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.