“சாகுற வர நான் கன்னடிகானு சொன்னருவரு இப்போ தமிழடிகாவா ஆயிட்டாரா?” – அண்ணாமலையை சீண்டும் சீமான்!

Seeman Bjp Annamalai
By Thahir Aug 01, 2021 11:24 AM GMT
Report

சென்னை அரும்பாக்கத்தில் கூவம் ஆற்றங்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறி 90 க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்தோர் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பிற்கு மாற்றப்பட்டனர். ஆனால் இன்னும் சிலருக்கு வீடு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக எதிர்த்து வருகிறார். இச்சூழலில் தற்போது வரை வீடு வழங்கப்படாமல் உள்ள குடிசை வாழ் மக்களை சீமான் இன்று நேரில் சந்தித்தார்.

“சாகுற வர நான் கன்னடிகானு சொன்னருவரு இப்போ தமிழடிகாவா ஆயிட்டாரா?” – அண்ணாமலையை சீண்டும் சீமான்! | Annamalai Bjp Seeman

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அரசின் பொருளாதாரமே கவலையில் இருக்கிறது. கூவம் ஆற்றில் ஸ்மார்ட் சிட்டி எதற்கு? தலைநகரில் தமிழர்கள் வாழக் கூடாது என திட்டமிட்டே இதைச் செய்கிறார்கள். ஆக்கிரமிப்பு என்ற சொல்லே அருவருக்ககத்தக்க ஒன்று. ஆட்சியருக்கு தெரியாமல் இந்த மக்கள் எப்படி இங்கு குடியேறி இருக்க முடியும். 25 ஆண்டுக்கும் மேலாக உள்ள அரசமரம் இங்கிருக்கிறது , இதுதான் அவர்கள் பல ஆண்டுகளாக இங்கு வாழ்ந்தற்கு ஆதாரம்.

மக்களை வெளியேற்றுவதில் திமுக , அதிமுக என இரண்டு கட்சிகளுக்கும் வேறுபாடில்லை கருணாநிதி , ஜெயலலிதா, பழனிசாமி ஆட்சியிலும் இதுபோன்று நடந்துள்ளது. வள்ளி திருமண , அரிச்சந்திர மயான கண்டம் , பவளக்கொடி நாடகம் போல தமிழக பாஜகவின் மேகதாது அணை எதிர்ப்பு போராட்ட அறிவிப்பை நாம் பார்க்க வேண்டும். பிரதமரிடம் நேரடியாக பேசாமல் போராட்டம் என்று சொல்லி வெட்டியாக பில்டப் கொடுக்கிறார் அண்ணாமலை. Till i death Proud கன்னடிகா (சாகும் வரை நான் கன்னடன்தான்) என்று கூறிய அண்ணாமலை தற்போது Proud தமிழடிகாவாக ஆகிவிட்டாரா? அண்ணாமலை பரிதாபத்திற்குரியவர். அலுவலராக இருந்தவரை தேவையில்லாமல் பதவி விலக வைத்துவிட்டனர்” என்றார்.