டாஸ்மாக் கடைகளை திறந்த போது வராதா கொரோனா கோவிலை திறந்தால் வருமா? - அண்ணாமலை

BJP Kovil Annamalai
By Thahir Oct 07, 2021 08:12 AM GMT
Report

கோயில்களை அனைத்து நாட்களிலும் திறக்க வலியுறுத்தி சென்னை மண்ணடியில்,பாஜக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "கோயிலை திறப்பது தொடர்பாக 10 நாட்களுக்குள் அரசு முடிவை மாற்றிக் கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது.

டாஸ்மாக் கடைகளை திறந்த போது வராதா கொரோனா கோவிலை திறந்தால் வருமா? - அண்ணாமலை | Annamalai Bjp Kovil

இல்லையென்றால் இந்த அரசை ஸ்தம்பிக்க வைப்போம். சதிதிட்டம் போட்டு கோவிலை அரசு திறக்க மாட்டேன் என்று இருக்கும் போது அதை எப்படி ஏற்று கொள்ள முடியும்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமைச்சர்கள் பிரச்சாரம் செய்யும் போது வராத கொரோனா, டாஸ்மாக் கடைகள் திறப்பின் போது வராத கொரோனா, கோவிலை திறந்தால் வருமா?.

திமுக சித்தாந்தத்தை நம்முடைய வீட்டிற்குள் புகுத்துகிறார்கள். உங்களின் சித்தாந்தத்தை எங்களின் சாமியிடமும், வீட்டின் பூஜை அறைக்கு கொண்டு வராதீர்கள்.

பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருப்பவர்கள் தொண்டர்கள் அல்ல சாதாரண மனிதர்கள். மக்களின் அறப்போரட்டம் இது.

10 நாட்களுக்குள் மீண்டும் அனைத்து நாட்களிலும் கோவில்களை திறக்கவில்லை என்றால் சிறைக்குச் செல்லவும் தயங்க மாட்டோம்.

உங்களின் கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்றாக இருக்க எங்களின் வாழ்வியல் முறையில் தலையிடாதீர்கள். மனசாட்சி இருக்கின்ற அரசாக இருந்தால் மக்களின் குறையை கேட்கும் அரசாக இருந்தால் பக்தி குறித்து வெறும் பேச்சாக இல்லாமல் செயலில் இருக்க வேண்டும். அடுத்த போராட்டத்திற்குத் தயாராக இருக்க வேண்டும்'