'நமக்கு மொட்டை போட தான் அந்த அறிவிப்பு' - அண்ணாமலை விமர்சனம்

DMK BJP MK Stalin Annamalai
By Thahir Sep 05, 2021 11:07 AM GMT
Report

இலவச மொட்டை போடும் திட்டத்தை திமுக அறிவித்தது நமக்கு மொட்டை போடுவதற்காக தான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் நேற்றையக் கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இனி மொட்டை அடிக்க கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவித்தார்.

மொட்டை அடிப்பவர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பிலேயே சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், நமக்கு மொட்டை போட தான் திமுக அரசு இலவச மொட்டை திட்டத்தை அறிவித்திருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் தான் சட்டப்பேரவையில் கடவுளை பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.