பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்: அதிருப்தியில் அண்ணமாலை- கூட்டணியில் சலசலப்பு
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் வெற்றிக்கு சாதகமில்லாதது என மேலிடத்தில் அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாகவும், அதனால் தான் போட்டியிட போவதில்லை என கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக-வுக்கும் மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் சாதகமில்லாத தொகுதிகளை அதிமுக ஒதுக்கியிருப்பதாக அண்ணாமலை அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

பாமக, அமமுக ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்கிய பின்னரே பாஜகவுக்கு ஒதுக்கியதாகவும், வளர்ந்து வரும் தொகுதிகளை விட்டுவிட்டு மற்ற தொகுதிகளை ஒதுக்கியதாகவும் கூறியதாக தெரிகிறது.
இதனால் தனக்கு போட்டியிட விருப்பமில்லை என்றும், தனக்காக எந்த தொகுதியையும் ஒதுக்க வேண்டாம் என தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
கோவை சிங்காநல்லூர் அல்லது அரவக்குறிச்சியில் அண்ணாமலை போட்டியிடலாம் என கூறப்பட்ட நிலையில், அது பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை.