அண்ணாமலை கைது - தடையை மீறியதால் நடவடிக்கை
அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்ணாமலை கைது
திருப்பூர், இடுவாய் ஊராட்சி சின்னகாளி பாளையம் பகுதியில் மாநகராட்சியின் குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஒரு மாத காலமாக போராடி வருகின்றனர்.

குப்பை லாரிகளை சிறைப்பிடித்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இதனை கண்டிக்கும் வகையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று திருப்பூர் குமரன் சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றார்.
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதியளிக்காததால், காரில் இருந்தவாறே அவர் பேசினார். பின் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்த முயன்றதாக
அண்ணாமலையை போலீசார் கைது செய்து அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.