தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்
Annamalai ips
By Petchi Avudaiappan
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதையடுத்து அடுத்த தமிழ்நாடு பாஜக தலைவர் யார் என்ற கேள்வி எழுந்திருந்தது.
இந்நிலையில் அண்மையில் பாஜகவில் இணைந்து மாநில துணைத்தலைவராக இருந்த அண்ணாமலையை தற்போது தமிழ்நாடு பாஜகத் தலைவராக நியமித்து தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவு பிறப்பித்துள்ளார்.