ஸாரி அண்ணா..ஹோட்டல் உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்ட அண்ணாமலை - நெகிழ்ச்சி சம்பவம்!
ஹோட்டல் உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!
ஏற்பாடு செய்யப்பட்ட மதிய உணவு
பாஜாக சார்பில் ஊழலை எதிர்த்து "என் மண் என் மக்கள் " என்ற பாதயாத்திரையை நடத்துகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. இந்த நடைப்பயணம் ராமேஸ்வரத்தில் தொடங்கி சென்னையில் முடிவடைய உள்ளது. இந்த பயணத்தை இன்று தொடங்குகிறார் அண்ணாமலை. இதற்காக நேற்று மதியம் மதுரை விமான நிலையம் வந்தார்.
ராமநாதபுரம் செல்லும் வழியில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நான்கு வழிச்சாலையில் உள்ள டெம்பிள் சிட்டி என்ற ஓட்டலில் அவருக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் அவருக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை.
ஓட்டல் முன்பு கட்சி கொடிகளுடன் கூடியிருந்தவர்களை பார்த்ததும் தனது வாகனத்தை அங்கு நிறுத்தினால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படும் என்று எண்ணி அங்கிருந்தவர்களுக்கு சைகை காட்டிவிட்டு திருப்புவனத்தை தாண்டி சென்றார் அண்ணாமலை.
மன்னிப்பு கேட்ட அண்ணாமலை
இந்நிலையில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை அண்னாமலைக்கு தெரிவித்துள்ளனர் கட்சி நிர்வாகிகள். உடனடியாக ஹோட்டல் உரிமையாளருக்கு போன் செய்த அண்ணாமலை "சாரி அண்ணா, ஓட்டல் முன் கூட்டம் இருந்ததால் கடந்து சென்று விட்டேன், உடனடியாக யூ டர்ன் செய்து ஓட்டலுக்கு வர முடியவில்லை.
அடுத்த முறை கட்டாயம் வருகிறேன் என்று மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.