நயினார் நாகேந்திரன் பேசிய பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமியிடம் வருத்தம் தெரிவித்தார் அண்ணாமலை

admk ops bjp eps annamalai tamilnadu politics tamilnadu head apologise to eps
By Swetha Subash Jan 26, 2022 10:28 AM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

அதிமுக எம்எல்ஏக்கள் குறித்து நயினார் நாகேந்திரன் பேசிய பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமியிடம் வருத்தம் தெரிவித்துள்ளார் அண்ணாமலை.

தஞ்சை மாவட்டம் தனியார் பள்ளியில் நிகழ்ந்த மாணவியின் மரணம் விவகாரத்தில் பாஜக தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை பாஜக நடத்தி இருக்கிறது. பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

லாவண்யாவின் மரணத்தில் நீதி கிடைக்கும் வரை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற படும் வரை போராட்டம் தொடரும் என்றும் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.

ஆர்ப்பாட்டத்தின்போது பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாக ஊடகங்களில் பரபரப்பு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

"தமிழகத்தில் திமுக ஆட்சி காலம் இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன. இந்த நான்கு ஆண்டுகாலம் அவர்கள் ஆட்சி நீடிக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. இந்த ஆட்சிக்கு பின்னர் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.

எம்ஜிஆர் கட்சி ஆரம்பிக்கும் நேரத்தில் எப்படி ஒரு எழுச்சி இருந்ததோ அதே போன்று தற்போது அண்ணாமலை தலைவராக உள்ள இந்த நேரத்தில் எழுந்து இருக்கிறது” என்று சொன்னார்.

“தமிழகத்தின் எதிர்க்கட்சி போல மக்கள் பிரச்சினைகளை பாஜகதான் பேசி வருகிறது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக ஆண்மையோடு பேசக்கூடிய ஒரு அதிமுகவினரை பார்க்க முடியவில்லை.

ஆனால் எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி கொடுப்பவர் அண்ணாமலை” என்று அவர் பேசியதாக செய்திகள் வெளியானதை அடுத்து கூட்டணி கட்சியான அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து நயினார் நாகேந்திரன் இதற்கு,

‘’இன்று வள்ளுவர் கோட்டத்தின் போராட்டத்தின் போது , அஇஅதிமுக பற்றிய என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ள பட்டுள்ளது.

நான் கூறிய கருத்துக்கு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை! போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரே எண்ணம்!!’’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனாலும் அதிமுகவில் நயினாரின் பேச்சு சலசலப்பை கூட்டிக்கொண்டே இருந்தது. கூட்டணியை விலகுங்கள் என்று அதிமுக தலைமைக்கு கட்சியினர் மெசேஜ் அனுப்பி வந்தனர்.

இந்த நிலையில், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தான் பேசி வருத்தம் தெரிவித்துவிட்டதாகவும், அவரும் அதை ஏற்றுக்கொண்டு விட்டதாகவும்,

நயினார் நாகேந்திரன் பேசிய பேச்சு தனிப்பட்ட பேச்சு அது பாஜகவின் கருத்து அல்ல என்று விளக்கம் அளித்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பேச முற்பட்டேன். லைன் கிடைக்கவில்லை என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.