பயிர் காப்பீடு கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டிக்குமா? - அண்ணாமலை பதில்
Central government
Bjp
Annamalai
Corp insurance
By Petchi Avudaiappan
பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு முறைப்படி நீட்டிக்கும் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மாவட்டத் தேர்தல் பணிகள் குறித்து, தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, சுதாகர் ரெட்டி உள்ளிட்டோருடன் அண்ணாமலை இன்று ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து சி.டி.ரவியுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், மத்திய அரசு விவசாயிகள் நலனுக்காக அதனை முறைப்படி நீட்டிக்கும் என்றும் தெரிவித்தார்.