புதிய கட்சியின் பெயர், சின்னம்: விரைவில் அறிவிக்கிறார் அண்ணாமலை
We The Leaders அமைப்பு கட்சியாக உருவெடுக்கும் என அதன் நிறுவனம் அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில் புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
கடந்த மாதம் பாஜகவில் இருந்து விலகிய அண்ணாலை We The Leaders அமைப்பை உருவாக்கினார், ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது.
கடந்த 12ம் தேதி பொள்ளாச்சியில் மாநாடும் நடந்த நிலையில் தூத்துக்குடியில் 2வது மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு புதிய கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அண்ணாமலை அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 3வது வாரத்தில் புதிய கட்சியின் பெயர் அறிவிக்கப்படலாம், தொடர்ந்து செப்டம்பர் 14ல் மதுரை அல்லது திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு நடத்தவும் அண்ணாமலை திட்டமிட்டுள்ளாராம்.
இதுதொடர்பில் தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
