அண்ணாமலைக்கு காய்ச்சல் பாதிப்பு : அதிர்ச்சியில் தமிழக பாஜக
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தென்காசி மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் திடீரென்று அந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
அண்ணாமலைக்கு காய்ச்சல்
இந்த நிலையில் பெங்களூர் சென்று வந்துள்ளதாகவும் , அங்கு தங்கியிருக்கும் போது அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.ஆகவே தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு பெங்களூரில் தங்கி ஓய்வெடுத்து வருவதாகவும் தகவல்வெளியாகியுள்ளது.
[
விரைவில் சென்னை
மேலும் இரண்டு நாள் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடகாவில் இன்று பிரதமர் மோடி சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சூழ்நிலையில் அண்ணாமலை நாளை அல்லது நாளை மறுநாள் சென்னை திரும்புவார் என்றும் அதைத் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது