அண்ணா பல்கலைகழக பாலியல் வழக்கு; குற்றவாளி திமுக நிர்வாகி? அண்ணாமலை வெளியிட்ட ஆதாரம்

DMK Chennai K. Annamalai Sexual harassment Anna University
By Karthikraja Dec 25, 2024 04:10 PM GMT
Report

அண்ணா பல்கலைகழக பாலியல் வழக்கு குற்றவாளி திமுக நிர்வாகி என அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம்

சென்னையில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

anna university girl

இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், இந்த குற்றத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். 

அண்ணா பல்கலைகழகத்தில் அதிர்ச்சி - காதலன் கண்முன்னே மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

அண்ணா பல்கலைகழகத்தில் அதிர்ச்சி - காதலன் கண்முன்னே மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

குற்றவாளி கைது

ஞானசேகரன் அந்த பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருபவர் என்பதும் இவர் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் எனவும் தெரிய வந்துள்ளது. 

அண்ணா பல்கலைகழக ஞானசேகரன்

மேலும் இவர் இரவு நேரங்களில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து இது போன்ற பலரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும், அவரின் செல்போனில் வீடியோக்கள் இருந்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்த குற்றத்தில் ஈடுபட்டவர் திமுக நிர்வாகி என குற்றஞ்சாட்டியுள்ளார்.

அண்ணாமலை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் என்ற நபர், ஏற்கனவே இது போன்ற குற்றங்களில் பல முறை ஈடுபட்டவர் என்பதும், அவர் திமுகவின், சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் என்பதும் தெரிய வந்துள்ளது. தமிழகம் முழுவதும், இதுபோன்ற குற்ற வழக்குகளில் இருந்து ஒரு தெளிவான திட்டம் புலப்படுகிறது.

ஒரு குற்றவாளி, திமுகவில் உறுப்பினராவதோடு, அந்தப் பகுதி திமுக நிர்வாகிகளுடன் நெருக்கமாகிறார். அவர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் கிடப்பில் போடப்படுகின்றன. மேலும், அவர் சரித்திரப் பதிவு குற்றவாளி என வகைப்படுத்தப்படாமல், பகுதி காவல் நிலையத்தின் கண்காணிப்புப் பட்டியலில் வைக்கப்படாமல் விடுவிக்கப்படுகிறார். அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் அழுத்தம் காரணமாக, அவர் மீதான வழக்குகளை காவல்துறை விசாரிக்காமல் இருப்பதால், மேலும் குற்றங்களைச் செய்ய அது அவருக்கு இடமளிக்கிறது.

ஆளுங்கட்சி அழுத்தம்

தொடர்ந்து தமிழகமெங்கும் நடைபெறும் குற்றங்களில், குற்றவாளிகள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்றால், ஆளுங்கட்சி நிர்வாகிகள் அழுத்தத்தால், காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே.

தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக, 15 வழக்குகள் உள்ள ஒருவரை, இத்தனை நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவைத்ததால்தான், இன்று ஒரு அப்பாவி மாணவிக்கு இந்தக் கொடூரம் நடைபெற்றிருக்கிறது. 

இதற்கு முழுக்க முழுக்க திமுக அரசே பொறுப்பு. எவ்வளவு காலம் தமிழக மக்கள் இந்த நிலையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்? ஆளுங்கட்சியினர் என்றால், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழகத்தில் சட்டம் உள்ளதா?" என தெரிவித்துள்ளார்.