பிரதமர் வருகையால் தமிழக பாஜக.வினரிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது - அண்ணாமலை!
பிரதமர் மோடியின் வருகையால் தமிழக பாஜகவினரிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் பாஜக அலுவலகத்தை, மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு, மக்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் வருகையால் தமிழக பாஜகவினரிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது. துணைவேந்தர் ஜெகநாதன் கைது நடவடிக்கை விவகாரம் தொடர்பாக, டிஜிபி, சேலம் காவல் ஆணையர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
பேட்டி
ஆத்தூரில் இரு விவசாயிகளுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில், சம்பந்தமே இல்லாமல் பாஜக மாவட்ட இலக்கிய அணி செயலாளரை தொடர்புப்படுத்துகின்றனர்.
பிற மாநிலங்களில் பெயருடன் சாதிப் பெயரையும் இணைத்தே எழுதுகின்றனர். அதனடிப்படையில் தான் விவசாயிகளின் சாதிப் பெயரை அமலாக்கத் துறை குறிப்பிட்டிருக்கும். தமிழக போலீஸாரும் எஃப்ஐஆர்-ல் சாதிப் பெயரை குறிப்பிட்டுத்தான் எழுதுகின்றனர்.
பிற மாநிலங்களில் பெயருடன் சாதிப் பெயரையும் இணைத்தே எழுதுகின்றனர். அதனடிப்படையில் தான் விவசாயிகளின் சாதிப் பெயரை அமலாக்கத் துறை குறிப்பிட்டிருக்கும். தமிழக போலீஸாரும் எஃப்ஐஆர்-ல் சாதிப் பெயரை குறிப்பிட்டுத்தான் எழுதுகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.