சிவராத்திரியில் அன்னதானம் சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த கதி - நிலைகுலைந்த மருத்துவமனை!
சிவராத்திரியில் அன்னதானம் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவராத்திரி
உத்திர பிரதேச மாநிலம், அலிகாரில் உள்ள சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதில், பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கோயில்களிலேயே தங்கி இரவு முழுவதும் வழிபட்டனர்.
அப்போது அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.அதனைச் சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப் போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அன்னதானம்
மேலும் உணவில் விஷம் ஏதும் கலக்கப்பட்டதாக பொது மக்கள் அச்சம் அடைந்தனர்.இந்த செய்தி ஊர் முழுவதும் தீயாய் பரவியது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உணவில் ஏதும் கலக்கப்பட்டதா என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.வழிபாட்டிற்கான சென்ற பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.