ரஜினிக்கு வயசே ஆகாதா? - ஆச்சரியத்தில் ரசிகர்கள்
அண்ணாத்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகியுள்ள நிலையில் ரஜினியின் இளமையான லுக்கை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்துளனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி மறைந்த பாடகர் எஸ்பிபி குரலில் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான’ அண்ணாத்த பேசுனா ஸ்டைலு பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது ’ சாரல் காற்றே’ என்ற மற்றொரு பாடலும் வெளியாகிவுள்ளது.இந்த பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளனர். இந்த பாடலில் ரஜினிகாந்த பார்ப்பதற்கு மிகவும் இளமையாக தெரிகிறார். இந்த பாடல் இளைஞர்களுக்கு பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
You may like this