தமிழகத்தில் “அண்ணாத்த” திரைப்படம் ஒரே நாளில் இத்தனை கோடி வசூலா?

Movie Collection Annaatthe Tamilnadu One Day
By Thahir Nov 05, 2021 06:08 AM GMT
Report

அண்ணாத்த படம் ரிலீஸான அன்று தமிழகத்தில் மட்டும் ரூ. 34.92 கோடி வசூல் செய்திருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையான நேற்று தியேட்டர்களில் வெளியானது.

ரஜினி ரசிகர்களுக்கு படம் மிகவும் பிடித்திருக்கிறது. வின்டேஜ் தலைவரை காட்டிய சிவாவுக்கு நன்றி என்று ரசிகர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

அண்ணாத்த மொக்கை, முடியலடா சாமி என்று மற்றவர்கள் விமர்சித்துள்ளனர். நீங்கள் என்ன சொன்னாலும் சரி நாங்கள் தியேட்டருக்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்று ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

குடும்பம், குடும்பமாக தியேட்டருக்கு சென்று படம் பார்க்கிறார்கள். இந்நிலையில் முதல் நாள் வசூல் விபரம் வெளியாகத் துவங்கியிருக்கிறது.

அண்ணாத்த படம் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ. 34.92 கோடி வசூல் செய்திருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது முதல் நாள் வசூலில் புது சாதனை ஆகும். மேலும் ஆஸ்திரேலியாவில் ரூ. 63 லட்சம் வசூலித்திருக்கிறது அண்ணாத்த.

இந்த வசூல் விபரத்தை பார்த்த ரஜினி ரசிகர்கள் கொண்டாட மூடில் இருக்கிறார்கள். இதற்கிடையே அண்ணாத்த படம் ரிலீஸான சில மணிநேரத்தில் அதை ஆன்லைனில் கசியவிட்டுவிட்டது தமிழ் ராக்கர்ஸ்.

இப்படி ஏதாவது நடக்கும் என்று தான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

சன் பிக்சர்ஸின் கோரிக்கையை ஏற்று அண்ணாத்த படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.