ரிலீஸ் ஆவதற்கு முன்பே சாதனை படைத்த அண்ணாத்த - மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Annaatthe அண்ணாத்த AnnaattheFDFS
By Petchi Avudaiappan Nov 03, 2021 01:06 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாதுரை திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல சாதனைகளைப் படைத்துள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் '. இந்தப் படத்தில் நயன்தாரா,கீர்த்தி சுரேஷ்,குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ், ஜெகபதிபாபு ஆகியோர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். 

இந்தப் படம் தீபாவளி வெளியீடாக நாளை திரைக்கு வர உள்ளதால் ரஜினி ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை முதல் ஞாயிறு வரை தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து உள்ளன. 

இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தை வெளிநாடுகளில் 1119 திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

அமெரிக்காவில் 572 ,ஐக்கிய அரபு நாடுகளில் 83, மலேசியாவில் 110, இலங்கையில் 60, ஆஸ்திரேலியா 70, நியூசிலாந்தில் 14, ஐரோப்பிய நாடுகளில் 135, இங்கிலாந்தில் 35, சிங்கப்பூரில் 23, கனடாவில் 17 என மொத்தமாக 1119 தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

இது ஒரு தமிழ் திரைப்படத்தின் மிகப்பெரிய வெளிநாட்டு வெளியீடு 1100+ திரையரங்குகள் எண்ணிக்கை ஆகும். இந்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.