அண்ணாத்த படத்தை இணையதளங்களில் வெளியிட தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Websites Annaatthe Film Publishing
By Thahir Oct 29, 2021 07:04 AM GMT
Report

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவர உள்ள அண்ணாத்த படத்தை இணையதளங்கள் வெளியிட தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இணையத்தில் அண்ணாத்த படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

அண்ணாத்த படத்தை சட்ட விரோதமாக இணையதளதங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சுமார் 3,500 சட்ட விரோத இணையதளங்களில் படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.

படத்தை இணையதளங்களில் வெளியிட்டால் பெரிய நஷ்டம் ஏற்படும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் வரும் தீபாவளிக்கு வெளியிடப்படுகிறது.

இயக்குனர் சிவா இயக்கியுள்ள அண்ணாத்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு ஆகியோர் நடித்துள்ளனர்.