ரஜினி ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ் - என்ன தெரியுமா?

AnnaattheAnnaatthe
By Petchi Avudaiappan Nov 11, 2021 07:08 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

 நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் முதல் வீடியோ பாடல் இன்று வெளியாகிறது. 

நடிகர்கள் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் ஆகியோர் நடிப்பில் சிவா இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் அண்ணாத்த. டி.இமான் இசையமைத்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்த படத்தில் ரஜினியின் அறிமுக பாடலாக ‘அண்ணாத்த ... அண்ணாத்த’ பாடல் இடம்பெற்று ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.கவிஞர் விவேகா எழுதியுள்ள இந்த பாடல் மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் கடைசி பாடலாக அமைந்தது. 

இப்பாடல் வழக்கமான ரஜினி பாடலுக்கே உரித்தான வகையில் ஸ்டைலாக மாஸாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணாத்த அண்ணாத்த பாடலின் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.