கீர்த்தி சுரேஷூக்கு கல்யாணம் - ஆடிப்பாடும் ரஜினி, மீனா, குஷ்பு
அண்ணாத்த படத்தில் இடம் பெற்றுள்ள மருதாணி பாடலின் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
படமானது நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி தினத்தன்று வெளியாக உள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர், முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அண்ணாத்த படத்தின் மருதாணி எனத் தொடங்கும் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பாடல் வரிகளின் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷூக்கு கல்யாணம் நடப்பது போலவும், அதற்கு ரஜினி ஆடிப்பாடுவது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதில் ரஜினியுடன் நடிகைகள் மீனா, குஷ்பு இருவரும் ஆடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.