விடா முயற்சியும் திறமையும் இருந்தால் பணமில்லாத ஏழைக்கும் வெற்றி நிச்சயம்- அண்ணாமலை

bjp neet annamalai
By Irumporai Sep 15, 2021 10:39 AM GMT
Report

தமிழ்நாட்டில் நீட் தேர்வு தொடர்பாக மேட்டூரை சேர்ந்த மாணவன் ஒருவர், மற்றும் அரியலூரை சேர்ந்த மாணவி ஒருவர் என இருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சௌந்தர்யா எனும் மாணவி தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்துள்ளார்

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக்கோரி சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது நீட் தொடர்பான மரணங்கள் நீண்டுக்கொண்டே வருகின்றன. இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை மாணவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்: வறுமையை கண்டு பயந்து விடாதே. திறமை இருக்கு மறந்து விடாதே.

என்று புரட்சித்தலைவர் பாடியது மாணவர்களாகிய உங்களுக்குத்தான். விடா முயற்சியும் திறமையும் இருந்தால் பணமில்லாத ஏழைக்கும் வெற்றி நிச்சயம். உங்கள் கனவுகளை விரிவாக்குங்கள். மருத்துவ படிப்பு என்ன? மருத்துவக் கல்லூரி கட்ட.. பெரிய மருத்துவமனை கட்ட. என்று இன்னும் எத்தனை எத்தனை வாய்ப்புகள் நமக்காகக் காத்திருக்கின்றன.

தற்கொலைக்குத் தூண்டும் சில பொய்யான பரப்புரையை நம்பி விலைமதிப்பற்ற உங்கள் உயிரை இழக்காதீர்கள். பிணத்தின் மீது விழும் மாலையால் பெருமை என்ன? தமிழக மாணவச் செல்வங்களே மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்.

அந்த மாலைகள் உனக்கு வெற்றி மாலைகள் ஆகட்டும். படிப்பின் மீது பிடிப்போடு இருங்கள். உங்கள் அறிவுக்கும் திறமைக்கும் ஈடுபாட்டுக்கும் முயற்சிக்கும் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள் என தெரிவித்துள்ளார்.