அண்ணா பல்கலை., மாணவர்களுக்கு ஆப்சென்ட் போட்ட விவகாரம் - அமைச்சர் பொன்முடி விளக்கம்
அண்ணா பல்கலைக்கழக தேர்வில் மாணவர்கள் தாமதமாக பதிவேற்றிய விடைத்தாள்களின் நிலை குறித்து அமைச்சர் பொன்முடி விளக்கமளித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் பிப்ரவரி 1 ஆம் தேதியில் இருந்து மார்ச் 12 ஆம் தேதி வரை ஆன்லைனில் நடைபெற்றன. இந்த தேர்வில் விடைத்தாள்களை தாமதமாக பதிவேற்றியதாக கூறி 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஆப்சென்ட் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கமளித்துள்ளார். அதில் மாணவர்கள் ஆப்சென்ட் என்று போட்டிருப்பது தவறு என்றும், அது சரி செய்யப்படும் எனவும் கூறினார்.
மேலும் தாமதமாக பதிவேற்றிய மாணவர்களின் விடைத்தாள்களும் திருத்தம் செய்யப்படுவதோடு, விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களுக்கு அதற்கான ஊதியம் விரைவில் வழங்கப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அதேசமய்ம் கல்வியின் தரத்தை உயர்த்தை வேண்டும் என்ற அடிப்படையில் இனி நேரடித் தேர்வுகள் மட்டுமே நடைபெறும் என்றும், ஆன்லைன் தேர்வுகளால் கல்வித்தரம் பாதிக்கப்படும் என்பதை மாணவர்கள் புரிந்து கொண்டு நேரடித் தேர்வுகளை எழுத வேண்டும் எனவும் அமைச்சர் பொன்முடி கேட்டுக் கொண்டார்.