அண்ணா பல்கலை கழக தேர்வு முடிவுகள் வெளியாகின - மாணவர்கள் மகிழ்ச்சி

Anna University Anna university Exam Result Re Exam Result 2021
By Thahir Aug 27, 2021 06:56 AM GMT
Report

அண்ணா பல்கலை கழக மாணவர்களின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகின.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால் கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து, ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதேநேரம், மாணவர்களின் எதிர்கால நலனை முன்னிட்டு சில முக்கியமான தேர்வுகள் மட்டும் நடத்தப்பட்டன. அந்த வகையில், அண்ணா பல்கலைக்கழக இளநிலை மற்றும் முதுநிலை செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டது.

அண்ணா பல்கலை கழக தேர்வு முடிவுகள் வெளியாகின - மாணவர்கள் மகிழ்ச்சி | Anna University Result Anna University Reexam

2020ம் ஆண்டுக்கான நவம்பர், டிசம்பர் மற்றும் 2021ம் ஆண்டிற்கான ஏப்ரல், மே மாதங்களில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றது. இருப்பினும், தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், தேர்வு முடிவுகள் இன்று காலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வு முடிவுகளை, https://auexams2.annauniv.edu/result/index.php மற்றும் https://auexams3.annauniv.edu/result/index.php ஆகிய இணையதளங்களில் அண்ணா பல்கலைக்கழக, மாணவ - மாணவியர் காலை முதல் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.

ஏராளமான மாணவ - மாணவியர் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகளை பார்க்க முயன்றதால், இணையதளம் சிறிது நேரம் முடங்கியது. எனவே, 'மாணவ - மாணவியர் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்; அனைவரும் தேர்ச்சி பெற்றிருப்பதால், யாரும் பதற்றமடைய வேண்டாம்' என்று தேர்வுகள் கட்டுப்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.