பிப்ரவரி 8ம் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

students exam college
By Jon Feb 08, 2021 04:22 PM GMT
Report

முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் வரும் 8 ஆம் தேதி முதல் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களுக்கு மேலாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி வகுப்புகள் ஆரம்பித்து தொடங்கி, மே மாதம் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், B.E., B.Tech., B.Arch., M.Arch. முதலாமாண்டு மாணவர்களுக்கு வரும் 8 ஆம் தேதியும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச் 15-ம் தேதியும், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஏப்ரல் 5-ம் தேதியும் தொடங்கும் என்றும், M.E., M.Tech., MBA, MCA, M.Sc. முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச் 8 ஆம் தேதி தொடங்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.