அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பத்ம ஸ்ரீ அனந்த கிருஷ்ணன் காலமானார்..!
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பத்ம ஸ்ரீ அனந்த கிருஷ்ணன் உடல்நலக்குறைவால் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். 93 வயதாகும் அனந்தகிருஷ்ணன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர், ஐ.ஐ.டி. கான்பூர் தலைவர், தமிழக அரசின் முன்னாள் தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் என்று பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். இவர், 1990 முதல் 1996 வரை இருமுறை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பதவி வகித்தார். கிண்டி பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவரும், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான அனந்தகிருஷ்ணனின் மறைவுக்கு பல்கலைக்கழக பேராசிரியர்கள், முன்னாள், இந்நாள் மாணவர்கள், கல்வியாளர்கள் என ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் மறைவுக்கு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.