பிரபலங்களுக்கு டாக்டர் பட்டங்களை வாரி வழங்கிய வள்ளலை வளைத்து பிடித்த போலீசார்
சமீபத்தில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பிரபலங்கள் பலருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.
பிரபலங்களுக்கு டாக்டர் பட்டம்
இந்த விழாவில் நடிகர் வடிவேலு, யூட்யூபர்கள் கோபி – சுதாகர், இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இந்த விழாவை அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைந்து IACHRC எனப்படும் சர்வதேச ஊழல் தடுப்பு, மனித உரிமைகள் அமைப்பு நடத்தியது.
இந்த கௌரவ டாக்டர் பட்டங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டவை என கருதப்பட்டது. தனியார் அமைப்புகள் ஊழல் தடுப்பு, மனித உரிமைகள் போன்ற வார்த்தைகளை பயன்படுத்த அனுமதி இல்லாத நிலையில்,
வள்ளலை வளைத்து பிடித்த போலீஸ்
அண்ணா பல்கலைக்கழக பெயர் மற்றும் அரசு முத்திரை ஆகியவற்றையும் அந்த அமைப்பு அழைப்பிதழ் ஆகியவற்றில் பயன்படுத்தி, அண்ணா பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பட்டம் போல திட்டமிட்டு மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய IACHRC அமைப்பின் நிர்வாகி ஹரிஷ் தலைமறைவான நிலையில் போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் இன்று ஆம்பூரில் தலைமறைவாக இருந்து ஹரிஷை போலீஸார் கைது செய்துள்ளனர்.