அண்ணா பல்கலை. வளாக பாலியல் வழக்கு.. ஸ்டாலின் மாடல் அரசு மீது சந்தேகம் -EPS பரபரப்பு!
அண்ணா பல்கலை. வளாக பாலியல் வழக்கில் மாநில அரசின் தலையீடற்ற , முறையான CBI விசாரணையே நீதியை வெளிக்கொண வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரித்துள்ளார்.
CBI விசாரணை
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது . இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவரை கைது போலீசார் கைது செய்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் மாநில அரசின் தலையீடற்ற , முறையான CBI விசாரணையே நீதியை வெளிக்கொண வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரித்துள்ளார்.
அண்ணா பல்கலை. வளாக பாலியல் வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரித்து வரும்நிலையில், பத்திரிகையாளர்கள் பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, அவர்களின் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டும் உள்ளதாக செய்திகள் வருகின்றன.
சந்தேகம்?
பத்திரிகையாளர்கள் போன்களைப் பறிமுதல் செய்யவேண்டிய அவசியம் என்ன?FIR லீக் ஆனது முழுக்க அரசின் தவறு. அதனை பத்திரிகையாளர்கள் பக்கம் திசைதிருப்ப முயல்வது கண்டிக்கத்தக்கது. உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டாலும், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் என்பதால்,

ஸ்டாலின் மாடல் அரசு இவ்வழக்கில் ஏதேனும் அழுத்தம் தருகிறதோ என சந்தேகம் எழுகிறது.#யார்_அந்த_SIR என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் வகையில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், மாநில அரசின் தலையீடற்ற , முறையான CBI விசாரணையே நீதியை வெளிக்கொணரும் என தெரிவித்துள்ளார்.
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan