பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினம் - பேரணியாக சென்று மரியாதை செலுத்திய முதலமைச்சர்
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக எம்பிகள் உள்ளிட்டோர் பேரணியாக சென்று அவரது நினைவு இடத்தில் மரியாதை செலுத்தினர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, திமுக எம்பிக்கள், டி.ஆர்.பாலு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை வாலாஜா சாலையில் இருந்து தொடங்கிய அமைதி பேரணி அண்ணா நினைவிடம் வரை நடைபெற்றது.
பின்னர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்த அமைதி பேரணியை அடுத்து காவல்துறை சார்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.