அண்ணாசிலைக்கு அவமரியாதை : பாதுகாப்பை பலபடுத்திய காவல்துறை

By Irumporai Sep 27, 2022 05:15 AM GMT
Report

விழுப்புரம் மாவட்டத்தில் அண்ணா சிலைக்கு அவமரியாதை செய்யப்பட்டதை தொடர்ந்து , சென்னையில் உள்ள அண்ண , பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு பல படுத்தபட்டுள்ளது .

அண்ணாசிலைக்கு அவமரியாதை 

கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக எம்பி ஆ.ராசா இந்து மதம் குறித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது , இதற்கு இந்து அமைப்புகள் தங்கள் கண்டனங்களை தெரிவித்தன.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலத்தில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு திமுக கொடியினால் மூடி செருப்பு மாலை அணிவித்து சென்றனர். அதோடு ஆ.ராசாவின் படத்தை கருப்பு புள்ளி குத்திவைத்து சென்றனர். 

போலீசார் பாதுகாப்பு

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ' அதேசமயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள பெரியார் மற்றும் அண்ணா சிலைகளுக்கு காவலர் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.