23 கோடிக்கு ஏலம் போன எருமை மாடு - இறுதியில் உரிமையாளர் வைத்த டிவிஸ்ட்

India Rajasthan
By Karthikraja Nov 11, 2024 01:00 PM GMT
Report

எருமை மாடு ஒன்றை 23 கோடிக்கு ஏலம் கேட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கால்நடை கண்காட்சி

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் ஆண்டுதோறும் சர்வதேச புஷ்கர் கண்காட்சி நடைபெறும். இதுவே இந்தியாவின் பெரிய கால்நடை கண்காட்சி ஆகும். இந்த கண்காட்சியில் கோடிக்கணக்கில் குதிரைகள் ஏலம் போகும். 

anmol buffalo worth 23crore

குதிரைகளை விட இந்த கண்காட்சியில் இருந்த அன்மோல் என்கிற எருமை மாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அன்மோல் உணவு

13 அடி நீளம், 6 அடி அங்குலம் 1500 கிலோ எடை கொண்ட முரா இனத்தை சேர்ந்த இந்த எருமை அங்கு வந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 8 வயதாகும் அன்மோலுக்கு ஒரு நாள் தீனிக்கு 2000 ரூபாய் செலவிடுவதாக அதனது உரிமையாளர் ஜக்தர் சிங் தெரிவித்துள்ளார். 

anmol buffalo worth 23crore

இதன் தினசரி உணவில் 4 கிலோ மாதுளை ஜூஸ், 30 வாழைப்பழங்கள், 20 ப்ரோடீன் நிறைந்த முட்டைகள் மற்றும் கால் கிலோ பாதாம் மற்றும் தீவனம் ஆகியவை அடங்கும். மேலும் ஒரு நாளைக்கு 2 குளிப்பாட்டப்பட்டு, கடுகு மற்றும் பாதாம் எண்ணெய் மூலம் மசாஜ் செய்யப்படுகிறது.

23 கோடி

அன்மோலின் விந்தணுவிற்கு சந்தையில் அதிக தேவை உள்ளது. வாரத்திற்கு இரண்டு முறை விந்தணு எடுக்கப்படுகிறது. இதன் மூலம் மாதம் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை லாபம் கிடைப்பதாக ஜக்தர் சிங் தெரிவித்துள்ளார். 

அன்மோலை ரூ. 23 கோடி வரை ஏலம் கேட்டனர். ஆனால் அதை எனது சொந்த மகனாக நினைத்து வளர்ப்பதால் விற்க மறுத்து விட்டேன் என அதன் உரிமையாளர் ஜக்தர் சிங் தெரிவித்துள்ளார்.