சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் ரஜினி பட நடிகை.., யார் தெரியுமா?

Kerala
By Yashini Mar 31, 2026 11:13 AM GMT
Report

கேரளாவில் ஏப்ரல் 9ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த டுவென்டி-20 கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், இந்த கட்சியின் சார்பில் 3 நடிகைகள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் ரஜினி பட நடிகை.., யார் தெரியுமா? | Anjali Nair To Contest In The Assembly Elections

அதில், நடிகை அஞ்சலி நாயர் திருப்பணித்துறா தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இவர் அண்ணாத்த,சித்தா. த்ரிஷ்யம்-2, ஹிருதயம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும், ஏட்டுமானூர் தொகுதியில் நடிகை வீணா நாயர் போட்டியிடுகிறார். பெரும்பாவூர் தொகுதியில் நடிகை லட்சுமி பிரியா களமிறங்கியுள்ளார். 

இதேபோல், மலையாள நடிகர் ரமேஷ் பிஷராடி பாலக்காடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

இதற்கிடையில், கொல்லம் தொகுதி எம்எல்ஏவாக உள்ள நடிகர் முகேஷுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பின் அவர்மீது எழுந்த புகார்களை தொடர்ந்து கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.