'இந்நேரம் லைட் ஆஃப் பண்ணிட்டு’... அனிதா சம்பத்திடம் ஆபாசமாக பேசிய இணையவாசி

By Petchi Avudaiappan Apr 26, 2022 10:36 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் பதிவுக்கு இணையவாசி ஒருவர் இரட்டை அர்த்த கமெண்ட் தெரிவித்த நிலையில், அதற்கு அனிதா கொடுத்த பதில் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவுக்கு வந்த ஒரு சிலரில் முக்கிய இடத்தை பிடித்துள்ள அனிதா சம்பத் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனிதா அடிக்கடி கணவர் பிரபாவுடன் இணைந்து போட்டோ, வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். 

அந்த வகையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவில் 'எப்போது நீங்கள் கர்ப்பம் ஆவீர்கள்" என்ற கேள்வி கேட்கப்பட்டு இருந்ததை பார்த்து ரசிகர்கள் பலரும் அனிதா சம்பத் கர்ப்பமாக இருக்கிறார் என நினைத்துக்கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால் தான் கர்ப்பமாக இல்லை என்றும், அது சும்மா ரீல்ஸ் தான் என்றும் அவர் விளக்கமளித்திருந்தார். 

இந்த பதிவில் இணையவாசி ஒருவர், “இப்படி ரீல்ஸ் வீடியோ போடுறதுக்கு பதில் லைட் ஆஃப் பண்ணிட்டு ஒழுங்கா வேலையை பார்த்திருந்தா.. இந்நேரம் கர்ப்பமாக ஆகியிருப்பீங்க" என இரட்டை அர்த்ததில் கமெண்ட் தெரிவித்திருந்தார். எப்போதும் இதுபோன்ற கமெண்ட்களுக்கு கோபப்படும் அனிதா இம்முறை சிரிக்கும் ஸ்மைலிகளை போட்டு பதில் கொடுத்துள்ளார். 

இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.