2வது கணவருடன் சென்ற இளைய மகள் - முதல்முறையாக புகைப்படம் வெளியிட்ட வனிதா!
தனது இளையமகளின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வனிதா வெளியிட்டுள்ளார்.
வனிதா விஜயகுமார்
நடிகை வனிதா விஜயகுமார் சினிமாவில் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் திகழ்ந்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். இவருக்கு 3 திருமணமாகி, மூன்றும் சுமூகமால கைக்கூட வில்லை.
2மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளார். தனது மூத்த மகளுடன் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது 2வது கணவர் ஆனந்த் ஜெய்ராஜன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தனது மகளை வனிதாவிடம் இருந்து பிரிந்து அழைத்து சென்றுவிட்டார்.
மகள் பிறந்தநாள்
தற்போது அந்த மகளுக்கு 14 வயதாகும் நிலையில், தனது தாய் வனிதாவுடன் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை வெளியிட்டு, எங்கள் வீட்டு குட்டி அரசிக்கு 14 வயதாகிடுச்சி என்று பதிவிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
வனிதாவின் முதல் கணவருடனான மகன் தனது தந்தையுடன் வசித்து வரும் நிலையில், 2-வது கணவரின் மகள் ஜெனித்தா தனது தந்தையுடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.