தாலியை கழட்டினா என்ன தப்பு? அனிதா சம்பத் அதிரடி!
தமிழகத்தில் சினிமாவில் நடிப்பவர்களை விட சமீபத்தில் செய்தி வாசிப்பாளர்கள், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் என எளிதாக மக்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கிவிட்டனர்.
அந்த வகையில் சன் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத்திற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது.

இதன் மூலம் கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் மக்கள் மத்தியில் பிரபலமானார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் அனிதா சம்பத் கமெண்ட் வழியாக தற்போது மீண்டும் செய்தியாகி உள்ளார்.
இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் அதிர்ச்சியாகி, தாலி எங்கே என கேள்வி கேட்க, அதற்கு அனிதா பதிலளித்துள்ளார்.

இது குறித்து அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட கருத்தில், என் செய்தியை அனைத்து மதத்தை சார்ந்தவர்களும் பார்ப்பார்கள்.
அதனால் நான் மதத்தை அடையாளப்படுத்த விரும்பவில்லை என தெரிவித்தார். மேலும், தாலியை மறைத்து தான் வைத்திருக்கிறேன் கழட்ட வில்லை என்றும் அப்படியே கழட்டுனாலும் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
