பட வாய்ப்புக்காக என்னை தவறான உறவுக்கு அழைத்தார்கள் - வெளிப்படையாக பேசிய அனிதா சம்பத்
பட வாய்ப்புக்காக தவறான உறவுக்கு அழைத்த நபர் என செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
பிரபல சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர் அனிதா சம்பத். இதனை தொடர்ந்து பிரபல விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் 4வது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிலரின் வெறுப்பையும் பெற்றார்.

நிகழ்ச்சியை முடித்த அனிதா சம்பத் தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடி வருகிறார். இந்த நிலையில், அனிதா சம்பத் போட்ட பதிவு ஒன்று சர்ச்சை ஆகியுள்ளது.
சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் பெண்கள் சிலருக்கு ஒத்துழைப்பு அளித்தால் தான் முன்னேற முடிகிறது என்ற பேச்சு இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல் அண்மையில் இளம்பெண் ஒருவரை தவறான விஷயத்திற்கு ஒருவர் அழைத்துள்ளார்.
அந்த பதிவை அனிதா சம்பத்திற்கு அவர் பகிர அப்படியே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து, பட வாய்ப்புகள் தருகிறேன் என இளம் பெண்களை பலரையும் தவறான பாதைக்கு அழைக்கும் இந்த மாதிரி சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள் என பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அம்மாவான பின்னும் குறையாத இளமை... sleeveless ஜாக்கெட்டுடன் ரசிகர்களை கிறங்கடிக்கும் VJ அஞ்சனா! Manithan
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரம் :200 அடி பள்ளத்தாக்கில் விழுந்த இராணுவ வாகனம்: பத்து வீரர்கள் உயிரிழப்பு IBC Tamil