“என் வயித்துல பிக்பாஸ் குழந்தை வளருது” - சர்ச்சையை கிளப்பிய அனிதா சம்பத்

julie anithasampath thamaraiselvi biggbossultimate
By Petchi Avudaiappan Feb 09, 2022 12:18 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

லிட்டில் பிக்பாஸ் என் வயித்துல வளருது என போட்டியாளர் அனிதா சம்பத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிக்பாஸ் சீசன் 5 நிறைவடைந்ததை தொடர்ந்து ஓடிடி தளத்திற்காக பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சி 24 மணி நேரமும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், அபிராமி, வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, நிரூப், தாமரைச் செல்வி, அபிநய் என மொத்தம் 14 போட்டியாளர்கள் பங்கேற்றனர். 

“என் வயித்துல பிக்பாஸ் குழந்தை வளருது” - சர்ச்சையை கிளப்பிய அனிதா சம்பத் | Anitha Sampath Comedy Speech In Bb Ultimate

இதில் கடந்த வாரம் நடைபெற்ற முதல் நாமினேஷனில் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் பல சுவாரஸ்யமான டாஸ்குகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்றதற்காக அனிதா சம்பத், ஜூலி இருவரும் பாதாள சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள். 

அப்போது ஜூலி பிக்பாஸூக்கு சீசன் 1ல் இருந்து வந்த என்னை தான் ரொம்ப பிடிக்கும் என சொல்ல, அது ஒரு கட்டத்தில் வேடிக்கையான பேச்சாக மாறுகிறது. அப்போது குறுக்கிட்ட அனிதா சம்பத், பிக்பாஸ் குழந்தை தன் வயிற்றில் வளர்வதாக கூறுகிறார். இதனைக் கேட்ட இருவரும் மற்ற இருவரும் பிக்பாஸ் உங்களோட மனைவி ரொம்ப மோசமா நடந்துக்கிறாங்க என்று கூறுகின்றனர். 

You May Like This