”பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்” - அனிதா சம்பத் பரபரப்பு பேச்சு

Actor Anitha Sampath Anchor Big Boss
By Thahir Sep 09, 2021 03:16 AM GMT
Report

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த நபர் குறித்து பிரபல செய்தி வாசிப்பாளரும், பிக் பாஸ் போட்டியாளருமான அனிதா சம்பத் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். தற்போது அவர் ஜாங்கோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

”பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்” - அனிதா சம்பத் பரபரப்பு பேச்சு | Anitha Sampath Actor Anchor Big Boss

அண்மையில் நடந்த ஜாங்கோ இசை வெளியீட்டு விழாவில் அனிதா சம்பத் கலந்து கொண்டு பேசினார். இந்நிலையில் அவர் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் நபர் குறித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று ஒருவர் அனிதாவின் தோழியிடம் இன்ஸ்டா சாட்டில் தெரிவித்திருக்கிறார். அதற்கு அந்த பெண், நீங்க வேறு ஆளை பாருங்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

விஜய் டிவியில எளிதில் வாய்ப்பு கிடைக்காது, ஒரு நாள் யோசி. பெரிய லெவலில் வர முடியும் என்று கூறியிருக்கிறார். இதனையடுத்து அந்த பெண் தன்னிடம் தவறாக பேசிய நபரின் சாட்டை ஸ்நாப் எடுத்து தன் தோழியான அனிதா சம்பத்திற்கு அனுப்பியுள்ளார்.

அனிதா அதை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து இது போன்ற ஆட்களை நம்பாதீர்கள் என்று தெரிவித்துள்ளார். பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் திரையுலகில் இருக்கிறது என்று சில பிரபலமான நடிகைகள் கூட தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் அனிதா சம்பத் இப்படி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.