நீண்ட நாள் கனவை நிஜமாக்கி.. நல்ல செய்தி சொன்ன அனிதா சம்பத் - குவியும் வாழ்த்துக்கள்
பிரபல சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர் அனிதா சம்பத்.
இதனை தொடர்ந்து பிரபல விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் 4-வது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிலரின் வெறுப்பையும் பெற்றார். நிகழ்ச்சியை முடித்த அனிதா சம்பத் பி.பி. ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடினார்.
இதனையடுத்து பிக்பாஸ் அல்டிமேட்டில் மீண்டும் போட்டியாளராக கலந்து கொண்டார் அனிதா சம்பத். அந்நிகழ்ச்சியில், கெட்ட வார்த்தை பேசியது, சிம்புவை விமர்சித்தது என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.
இதனையடுத்து, தான் புதிதாக வீடு ஒன்றை வாங்கி இருப்பதாக அனிதா சம்பத் தெரிவித்துள்ளார். புது வீடு கிரஹப்பிரவேசத்தின் போது கணவருடன் எடுத்த புகைப்படத்தை தற்போது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
‘நிறைய வலிகளும் நிறைய உழைப்பும் நிறைய மெனக்கெடல்களும் கடந்து அன்னையர் தினம் அன்று எங்கள் அன்னையர்களுக்காக அவர்களின் சொந்த வீட்டு கனவை நினைவாக்கி விட்டோம்’ என்று பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அனிதா சம்பத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.