தவெகவில் சேர சொல்லி போலீஸ் வற்புறுத்தினர் - அனிதா ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
தவெகவில் இணைய சொல்லி போலீஸ் வற்புறுத்தியதாக அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
அனிதா ராதாகிருஷ்ணனை தவெகவில் சேர சொல்லி வற்புறுத்தல்
திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணனிடம், SP அலுவலகத்தில் வைத்து 5 மணி நேரத்திற்கு மேலாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு பின்னர், அவரை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற போது, தவெகவில் இணைய சொல்லி போலீஸ் வற்புறுத்துவதாக செய்தியாளர்களிடம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று என் MLA பதவியை ராஜினாமா செய்யச் சொன்னார்கள். என்னை தவெகவில் சேர சொல்லி வற்புறுத்தினார்கள். அது ஒரு போதும் நடக்காது. என்னை யாரும் தொட்டு பார்க்க முடியாது.
எங்கள் தலைவர் சொல்வதே கட்டளை. எப்போதும் திமுகவில் உறுதியாக இருப்பேன். காவல்துறை அராஜகம் செய்கிறது. விஜய்யை மட்டுமல்ல யாரையும் நாங்கள் எதிர்ப்போம்" என முழக்கமிட்டார்.