தண்ணீரில் கால் வைக்க தயங்கிய அமைச்சர்...குண்டு கட்டாக இடுப்பில் துாக்கி சென்ற மீனவர்...
படகில் சென்ற மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தண்ணீரில் இறங்க தயங்கியதால் மீனவர் ஒருவர் அமைச்சரை குண்டுகட்டாக இடுப்பில் துாக்கி சென்று கரை சேர்த்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் ஆய்வு பணிக்கு வந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் படகில் இருந்து இறங்கி தண்ணீரில் கால் வைக்க தயங்கிதால் மீனவர் ஒருவர் குண்டுகட்டாக இடுப்பில் துாக்கிச் சென்று கரை சேர்த்தார்.
முகத்துவாரம் பகுதியில் மணல் அரிப்பு ஏற்பட்டு நுழைவு வாயில் அடைப்பட்டு கிடக்கும் நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுடன் விசைப்படகில் சென்று முகத்துவாரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அமைச்சரின் படகில் அதிக நபர்கள் ஏறியதால் தொடர்ந்து செல்ல முடியாமல் தடுமாறியது.
இதனையடுத்து அமைச்சர் படுகில் இருந்த சிலர் வேற படகுக்கு மாற்றப்பட்டனர்.ஆய்வை முடித்து கொண்டு திரும்பிய அமைச்சர் படகில் இருந்து இறங்கி உப்பங்களி நீரில் கால் வைக்க தயங்கியதால் மீனவர் ஒருவர் இடுப்பில் துாக்கிச் சென்றார்.அப்போது முகத்துவாரம் பகுதியை விரைவில் சீரமைத்து தரக் கோரி அமைச்சரிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.அதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.