10 ஆண்டு காலம் அதிமுக ஆட்சி அவலங்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி: அனிதா ராதாகிருஷ்ணன்
கடந்த 10 ஆண்டு காலம் நடைபெற்ற ஆட்சியுனுடைய அவலங்களுக்கு தீர்ப்பு அளிக்க கூடிய தேர்தலாக இந்த தேர்தல் அமையும் என்று திருச்செந்தூரில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் திமுக வேட்பாளர் அனிதா ராதா கிருஷ்ணன் அறிவிக்கப்பட்டத்தை முன்னிட்டு திருச்செந்தூர் பதம்ஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடந்த 10 ஆண்டு காலம் நடைபெற்ற ஆட்சியினுடைய அவலங்களுக்கு தீர்ப்பளிக்க கூடிய தேர்தலாக இந்த தேர்தல் அமையும். அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார். மக்கள் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் மட்டும் அல்ல டீசல் உட்பட எல்லாம் பொருட்களிலும் விலைவாசி ஏற்றத்தால் மக்கள் அவதிபடுகின்ற நிலையுள்ளது.
அதை எல்லாம் போக்குகின்ற வகையிலே மக்கள் ஆட்சி மாற்றத்தினை விரும்புகின்றார்கள். அந்த மாற்றத்தை திருச்செந்தூரிலும் தருவார்கள், அதன் வகையில் ஊர் ஊராக உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வருவோம் என தெரிவித்துள்ளார்.