அனிதா பிறந்தநாள்: அடிமைகள், பாசிஸ்டுகளை ஓட ஓட விரட்டி அடிப்போம் - உதயநிதி!

anitha tamilnadu neet
By Jon Mar 05, 2021 01:28 PM GMT
Report

தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையிலே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு நீட் தேர்வுக்கு எதிராக போராடி வந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டிருந்தார். நீட் தேர்வு கூடாது என பல்வேறு மட்டத்திலும் போராடி வந்தவர் அனிதா. உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டத்தையும் செய்தார்.

ஆனால், ஏதும் பலன் இல்லாமல் போனது. மருத்துவராக வேண்டும் என்ற கனவு கானல் நீர் போல் கரைந்தது. இதை தாங்கிக்கொள்ள முடியாமல், உயிரை மாய்த்துக்கொண்டார் அனிதா. அதன் பிறகு தற்போது வரை நீட் தேர்வுக்கு எதிராக 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இருந்தாலும் நீட் தேர்வு ரத்தாகவில்லை. இன்று அனிதாவின் 21வது பிறந்தநாள். இது தொடர்பாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ட்விட்டரில் அனிதாவை குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “இந்திய கிராமப்புற மாணவரின் ஒற்றை பிரதிநிதியாக நீட்டை ஒழிக்க புறப்பட்ட தங்கை அனிதாவின் 21-வது பிறந்த நாள் இன்று. நீட் தேர்வாலும்-அதை திணித்தவர்களாலும் கூட்டுக்கொலை செய்யப்பட்ட அனிதாவுக்கு நியாயம் கிடைக்க-நீட் இல்லா தமிழகம் அமைக்க, அடிமைகள்-பாசிஸ்ட்டுகளை விரட்டி கழக அரசை அமைப்போம்.” என்றார்.