பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத் தந்தை திடீர் மரணம்

anitha sampath father ddeath
By Jon Dec 29, 2020 06:04 PM GMT
Report

பிக்பாஸ் புகழ் அனிதாவின் தந்தை ஆர்.சி. சம்பத் திடீரென மாரடைப்பால் இன்று உயிரிழந்தார்.

பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு பிரபலமானவர் அனிதா சம்பத், கடந்த வாரம் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் இவரது தந்தையான ஆர்.சி.சம்பத் இன்று திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

பெங்களூரு சென்ற போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூகம் பயன் பெறும் வகையில் ஏராளமான புத்தகங்கள் ஆர்.சி. சம்பத் எழுதியுள்ளார்.

அவர் தாய் வார இதழ் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.