பிக்பாஸ் வீட்டில் வெடித்த அடுத்த சண்டை: வனிதா - பாலா மோதலால் பரபரப்பு
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா - பாலா இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா ஆகியோர் வெளியேறிய நிலையில் இந்த வாரம் வீட்டின் தலைவராக வனிதா விஜயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே நேற்றைய நிகழ்ச்சியில் 80களின் வாழ்வின் நினைவை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் கல்லூரி - பேராசியர்கள் என நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் பிரிந்து கொண்டனர். அதேபோல் ஒவ்வொருவரும் ஒரு கேரக்டரை பிரதிபலிக்கும் வகையில் விதிகள் அமைக்கப்பட்டது.
இதில் பாலாஜி முருகதாஸுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை அவர் சரியாக செய்யவில்லை என வனிதா குற்றம் சாட்டுகிறார். அதற்கு பாலாஜி ‘நான் பண்ணத நீங்க பாத்தீங்களா? ஏன் எல்லாரையும் டிஸ்கரேஜ் பண்றீங்க? நீங்க நான் பண்ணது என்னனு தெரியலனா பேசவே கூடாது. கேப்டன் ஆகும் போது நீங்க என்ன சொன்னீங்க? யார் என்ன டாஸ்க் பண்ணாலும், நான் நடுவுல வந்து தலையிட மாட்டேன்னு சொன்னீங்கள்ல? என கடுமையாக சாடினார்.
இதற்கு வனிதாவும் பதிலடி கொடுக்கும் வகையில் தான் டிஸ்கரேஜ் பண்ணவில்லை என்றும், முதலில் கேரக்டரை புரிந்துகொண்டு நடிக்க வேண்டும் என்றும் பதிலளித்தார். இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் டிவியில் ஒளிபரப்பான சீசன்களை விட இந்த நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.