முதல்வர் குறித்து அவதூறு பேச்சு.., திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது

DMK Anitha R. Radhakrishnan TVK
By Yashini Jul 03, 2026 07:55 AM GMT
Report

முதல்வர் விஜயை அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவதூறு பேச்சு

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் கடந்த ஜூன் 20ஆம் தேதி திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூரில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜயை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு.., திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது | Anita Radhakrishnan Arrested Over Remarks On Cm

மேலும், மற்றொரு நடிகையுடன் தொடர்புபடுத்தியும் கருத்து தெரிவித்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து, தவெக நகர செயலாளர் செல்வம், ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அனிதா ராதாகிருஷ்ணன் கைது

புகாரின் அடிப்படையில், அனிதா ராதாகிருஷ்ணன் மீது காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று காலை ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வுல் இருந்த அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்தனர்.

முதல்வர் விஜயை அவதூறாக பேசிய வழக்கில், திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.