இந்த அனி'க்கு இதே வேலைய போச்சு...BADASS'ஆனா கைப்புள்ள BGM - அலப்பறய ஆரம்பித்த ரசிகர்கள்

Vijay Anirudh Ravichander Vadivelu Leo
By Karthick Sep 28, 2023 06:16 AM GMT
Report

லியோ படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாக இருக்கும் நிலையில், அது கைப்புள்ள காமெடி BGM தான என்று ரசிகர்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றனர்.

விஜய்யின் லியோ

நடிகர் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன், மிஷ்கின் போன்றோர் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் "லியோ". மாஸ்டர், விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் - லோகேஷ் கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளது.

aniruth-copying-kaipulla-for-leo-badass-background

வரும் அக்டோபர் 19-ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் பணிகளை தற்போது படக்குழுவினர் துவங்கியுள்ளனர். தினமும் ஒரு போஸ்டர் என அதிரடி காட்டி வரும் படக்குழு படத்தின் இசை வெளியிட்டு விழாவை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருந்த நிலையில், திடீரென ரத்தாகி இருக்கின்றது.

இதற்கு மத்தியில், படத்திலிருந்து இரண்டாவது பாடல் இன்று வெளியாக இருக்கின்றது. #BADASS என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலின் முன்னோற்றம் நள்ளிரவு வெளியான நிலையில், முழு பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

aniruth-copying-kaipulla-for-leo-badass-background

பெரும்பாலும் அனிருத் பாடல்கள் அந்த பாட்டின் காப்பி, இந்த பாட்டின் காப்பி என கருத்துக்கள் தெரிவித்து வரும் ரசிகர்கள் தற்போது இப்பாட்டையும் decode செய்துள்ளனர். சுந்தர் சி இயக்கத்தில் வெளியான வின்னர் படத்தின் வடிவேலுவின் கைப்புள்ள காமெடி BGM என கண்டறிந்து தற்போது விமர்சிக்க துவங்கி இருக்கின்றனர்.