அனிருத்தின் தாத்தா இசையமைப்பாளர் எஸ்.வி.ரமணன் காலமானார்
இளம் இசையமைப்பாளரான அனிருத்தின் தாத்தா,இசையமைப்பாளர் எஸ்.வி.ரமணன் இன்று காலை காலமானார்.
இசையமைப்பாளர் எஸ்.வி.ரமணன்
தொலைக்காட்சி, வானொலி, விளம்பரம், திரைப்படம் என அனைத்து துறைகளிலும் தனக்கென தனி ஆடையாளத்தை வைத்திருந்தவர் ,இசையமைப்பாளர் எஸ்.வி.ரமணன்.
ஆயிரக்கணக்கான வானொலி விளம்பரங்களுக்கு குரல் கொடுத்துள்ளார். சென்னை ஆர்.ஏ.புரத்தில் வசித்துவந்த இவர், இன்று காலை வயதுமூப்பு காரணமாக காலமானார். இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
இன்று இறுதி சடங்கு
இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். ரமணனின் தந்தை கே.சுப்பிரமணியமும் புகழ்பெற்ற இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்மிகம் சம்பந்தப்பட்ட ஆவணப்படங்களையும் அவர் தயாரித்துள்ளார். ரமண மகரிஷி, ஷீரடி சாய் பாபா ஆகிய ஆன்மிக ஞானிகள் பற்றிய ஆவணப்படங்கள் பெரிய வரவேற்பைப் பெற்றது குறிப்பிடதக்கது.