சிம்புவும், அனிருத்தும் சேர்ந்து செய்யப்போகும் சம்பவம் - இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழகத்தில் இந்தி திணிப்பு பிரச்னை தீவிரமாகி வரும் நிலையில் சிம்புவும், அனிருத்தும் போட்ட ட்வீட் இணையத்தில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியை ஆங்கிலத்துக்கு மாற்று மொழியாக கொண்டு வரும் தருணம் வந்து விட்டது என்றார். இந்த கருத்துக்கு அரசியல்வாதிகளும், திரைத்துறையினரும் தங்கள் கண்டனத்தை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்தனர்.
அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழன்னையின் ஓவியத்தைப் பகிர்ந்து ’தமிழணங்கு’ எனக் குறிப்பிட்டிருந்தார். இது இந்திய அளவில் பேசு பொருளாக மாறியது. இதனிடையே ஆட்டோ டிரைவர் கெட்அப்பில் சிம்புவும், அனிருத்தும், தமிழால் இணைவோம் #TamilConnects என ஒரே மாதிரி ட்வீட் செய்தனர். இதனால் ஏ.ஆர்.ரஹ்மானிற்கு ஆதரவாக மொழி பிரச்சனையில் குரல் கொடுக்கிறார்கள் என சொல்லப்பட்டது.
ஆனால் இயக்குநர் வெங்கட்பிரபு இதனை குறிப்பிட்டு வந்தாங்க. ட்வீட் போட்டாங்க. டிரெண்ட் ஆனாங்க. ரிப்பீட்டு. என்ன நடக்குது ப்ரதர்ஸ்? என்ன இது #TamilConnects #தமிழால்_இணைவோம்? என கேட்க அதை ரீட்வீட் செய்த சிம்பு என்ன அனிருத் சொல்லிடலாமா என கேட்டார்.அதற்கு அனிருத், நாளைக்கு நல்ல நாள் தமிழ் புத்தாண்டு. அப்போ சொல்லிருவோம் என பதிவிட்டார்.
இதன்மூலம் புதுப்படம், மியூசிக் ஆல்பம் ஏதாவது ஒன்றிற்கான அறிவிப்பா என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். ஒருவேளை சிம்புவும், அனிருத்தும் ஆஹா தமிழ் ஸ்ட்ரீமிங் ஆப்டோட பிராண்ட் அம்பாசிடர் என்பதால் இந்த விளம்பரமா என்ற கேள்வியெழுந்துள்ளது.
நாளைக்கு நல்ல நாள் தமிழ் புத்தாண்டு அப்போ சொல்லிருவோம்.. ? #தமிழால்_இணைவோம் #TamilConnects pic.twitter.com/f3EJXaGg8o
— Anirudh Ravichander (@anirudhofficial) April 13, 2022